தருமபுரி மாவட்டம் ,நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழக த்தின் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் தேவரசம்பட்டியில் உள்ள ஸ்ரீ லட்சுமி மஹால் திருமண மண்டபத்தில் வீரமணி ஒன்றிய அவைத்தலைவர் தலைமையில் நடைபெற்றது. மகேஷ் வரவேற்புரை ஆற்றினார். ரங்கநாதன், ஆனந்தன், சந்திரன், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆ. மணி, முன்னாள் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, மாவட்ட துணைச் செயலாளர் ரேணுகா தேவி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் நடராஜ், மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இந்த கூட்டத்தில் கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்தும், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தருமபுரி, பென்னாகரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் வைகுந்தம், காவேரி, மகளிர் அணி முத்துலட்சுமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் பச்சியப்பன், பொன்னுசாமி, சுற்றுச்சூழல் அணி இளைய சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். சண்முகம் நல்லம்பள்ளி ஒன்றிய கழகச் செயலாளர் நன்றி கூறினார்.



