மதுரை ஏப்ரல் 02
மதுரை வேலம்மாள் மருத்துவகல்லூரியில் உடல் உறுப்பு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவின் இதயம் கணையம் சிருநீரகம் புதிய மையம் திறப்பு விழா.
வேலம்மாள் மருத்துவக் கல்லூரி தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில்
மருத்துவக் கல்லூரியில் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் திருநாவுக்கரசு மற்றும் சிறப்பு மருத்துவர் ஆராய்ச்சி டீன் டாக்டர் ரத்தினவேலு மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கணேஷ் பிரபு
மருத்துவ தலைமை நிர்வாக அதிகாரி மணிவண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஆராய்ச்சி முதுநிலை மருத்துவர் ரத்தினவேல் கூறுகையில் உடல் மாற்று அறுவை சிகிச்சையில் சென்னை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய முதுநிலை மருத்துவர் டாக்டர் ராஜேஷ் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறுவை சிகிட்சைகளை செய்தவர் தற்போது வேலம்மாள் குழுமத்தில் இணைந்து
புதிய கல்லீரல் மாற்று அறுவை சிகிட்சை மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுளது என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து
இது குறித்து வேலம்மாள் மருத்துவ கல்லூரி தலைவர் முத்துராமலிங்கம் கூறுகையில்
மருத்துவப் பணியில் முன்னணியாக திகழும் வேலம்மாள் மருத்துவமனை மற்றும் அதன் சிறப்பு மருத்துவமனையில் இருதய அறிவியல் நரம்பியல் அறிவியல், இரைப்பை மற்றும் கல்லீரல் அறிவியலின் சிறுநீரக பராமரிப்பு மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் இஎன்டி தலை மற்றும் கழுத்து அறிவை சிகிச்சை ஆகிய 5 குழுமங்களின் பிரம்மாண்ட திறப்பு விழாவை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது.
மேலும்
இது உறுப்பு மாற்று பிரிவு மற்றும் நோயாளி பராமரிப்பு முன்னேற்றுவதற்கான அதன் உறுதி பாட்டில் ஒரு குறிப்பிட்ட தக்க மைல் கல்லை குறிக்கிறது.
உறுப்பு மாற்று மேம்பாடு நோயாளிகள் நவீன கருவிகள் மற்றும் சிறப்பு சிகிச்சை திட்டங்களால் அதிகரிக்கப்படும்.
அந்தந்த துறைகளில் கவனம் செலுத்திய நிமிடம் மருத்துவ சேவையை வழங்கும் இந்த 5 இன்ஸ்டியூட்டுகள் சிக்கலான மற்றும் நாள்பட்ட நிலைமைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு விரிவான சிகிச்சையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது
என்று கூறினார்.
அதன் பின்னர் பேசிய
கல்லீரல் மற்றும் கணையம் மாற்று அறுவை சிகிச்சை முதுநிலை மருத்துவர் ஜாய் வர்கீஸ்
கல்லீரல் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நலமுடன் இருப்பவரின் கல்லீரல் அவரின் உடலில் இருந்து நோயாளியின் எடைக்கு ஏற்ப தேவையான அளவு அறுவை சிகிட்சையின் மூலம்
பொருத்தப்படுகிறது.
கல்லீரல் நலமுடன் இருப்பவர்கள் உடலில் இருந்தும் நோயாளிகளுக்கும் பொருத்தப்படுவதால் இயற்கையாகவே வளரும் தன்மை என்பதால் தானமாக அளிப்பவரும் நோயாளியும் விரைவில் நோயின் பாதிப்பில் இருந்து விடுபட முடியும் எனத் தெரிவித்தார்.
இந்த விழாவின் போது வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் தலைவர்
எம்.பி. முத்துராமலிங்கம்,
இருதயவியல் இயக்குனர் டாக்டர் சண்முகம் சுந்தரம் இருதவியல் மற்றும் ஆய்வகங்களின் இயக்குனர். டாக்டர் எம் எஸ் ராம் பிரசாத் மற்றும் அறுவை சிகிச்சை முன்னாடியின் மூத்த ஆலோசகர் டாக்டர் எம் செந்தில் மற்றும் பல்வேறு மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.