ராமநாதபுரம், மார்ச் 10-
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி தொண்டி பேரூர் அலுவலகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை சார்பில் தொண்டியைச் சேர்ந்த சகோதரி ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
சகோதரிக்கு தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை மாவட்ட செயலாளர் ஷரிபா ஜெய்னுல் ஆபிதீன், மாவட்ட பொருளாளர் தொண்டி பேரூராட்சி மமக கவுன்சிலர் சமீமா பானு, நகர செயலாளர் நாச்சியா, பொருளாளர் பவுசியா பானு ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்வில் தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்சா, மமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி, துனை தலைவர் சாகுல் ஹமிது தொண்டரணி மாவட்ட பொருளாளர் ஹசன், மாவட்ட ஊடக அணி செயலாளர் முஹம்மது பஹ்ருல்லா ஷா, தொண்டி பேரூர் தமுமுக மமக தலைவர் காதர், மமக செயலாளர் பரக்கத் அலி, தமுமுக செயலாளர் முகைதீன் பிச்சை, நகர பொருளாளர் அப்துல்லா ஆகியோர் உடன் இருந்தனர். இதர்கான ஏற்பாடுகள் செய்து நன்றியை நகர் பொருளர் அப்துல்லாஹ் செய்தார்