மயிலாடுதுறையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்கு நடைமுறை அறிவை வழங்கும் வகையில், ரூ.2.43 கோடி மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா அமைக்க பூமிபூஜை:- நகராட்சி தலைவர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடக்கி வைத்தார்:-
மயிலாடுதுறை நகராட்சி 16-வது வார்டு பார்க் அவென்யு சாலையில் உள்ள வரதாச்சாரியார் பூங்காவில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2024-25-ன்கீழ் ரூ.2.43 கோடி மதிப்பீட்டில்; அறிவியல் பூங்கா அமைக்கப்படவுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்கு நடைமுறை அறிவை வழங்கும் வகையில், நவீன டிஜிட்டல் கோளரங்கம் 8 மீட்டர் விட்டம் கொண்ட கோள வடிவத் திரையில், 4000 பிக்ஸல்ஸ் தரத்தில் அறிவியல் மற்றும் வானவியல் தொடர்பான ஒலி-ஒளி காட்சிகள் 40 இருக்கைகளுடன் குளிர்சாத வசதியுடன் இந்த அறிவியல் பூங்கா அமையவுள்ளது. இதற்காக நடைபெற்ற பூமிபூஜையில், நகராட்சித் தலைவர் செல்வராஜ் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடக்கி வைத்தார். இந்த பணிகள் நிகழாண்டிலேயே நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், நகராட்சி துணைத் தலைவர் சிவக்குமார், நகர மன்ற உறுப்பினர்கள் சர்வோதயன் , ரமேஷ், காந்தி, சபா, தெய்வநாயகம், உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.