திருப்பத்தூர்:பிப்:16, திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை ரோடு ஏழாவது தெரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.
மேலும் இப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட தெருகளும் அதேபோல பள்ளியும் செயல்பட்டு வருகிறது.
செல்போன் டவர் அமைவதால் அதிலிருந்து வெளியேறும் கதிர் வீச்சுகளால் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், என 2000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவே எங்கள் பகுதியில் செல்போன் டவர் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்
இந்த நிலையில் நேற்று திடீரென ஒரே நாளில் சுமார் 80 சதவீதம் டவர் அமைக்கும் பணியை முடித்துள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் டவரின் கீழ் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த சம்பவம் அறிந்த திருப்பத்தூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதி மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்
அதனை தொடர்ந்து துணை வட்டாட்சியர் தணிகாசலம் சம்பவ இடத்திற்கு வந்து இதற்கு முறையான ஆவணங்கள் தரப்பட்டுள்ளதா என தவறமைக்கும் பணியாளர்களிடம் கேள்வி எழுப்பினர் அதற்கு முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்ததன் காரணமாக டவர் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள் மேலும் NOC சான்றிதழ் எடுத்துக் கொண்டு வட்டாட்சியர் அலுவலகம் வாருங்கள் என கூறினார்.
பின்னர் பொதுமக்கள் தயவு செய்து இந்த டவரை இங்கிருந்து எடுத்து விடுங்கள் என துணை வட்டாட்சியர் காலில் விலவும் முற்பட்டனர் இதனால் அங்கு சிறிது சலசலப்பு காணப்பட்டது.
மேலும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் அங்கிருந்து கலந்து சென்றனர் இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.