மயிலாடுதுறை, பிப்.12-
எம்.பி.அன்புமணி நிதியில் கட்டப்பட்ட கட்டடத்தை திறந்துவைத்த சவுமியாஅன்புமணி
மயிலாடுதுறை கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 2022-23ம் நிதியாண்டி எம்.பி.அன்புமணிராமதாஸ் நிதியில் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது. பாமக மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மணி, முன்னாள் எம்.எல்.ஏ.ஜெகவீரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பசுமை தாயம் தலைவரும், அன்புமணியின் மனைவியுமான சவுமியாஅன்புமணி புதிய கட்டடத்தை திறந்துவைத்து பேசினார். இதில் பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர். தலைமை ஆசிரியர் அன்புச்செழியன் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் செல்லதுரை நன்றி கூறினார்.