கத்தார், பிப்.5-
தமிழர் நல்வாழ்வு பேரவை – கத்தர் மண்டலம் சார்பில் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு நமது தேசம்..! நமது நேசம்..!
எனும் தலைப்பில் மாபெரும் சமூக
நல்லிணக்க கருத்தரங்கம் ஏசியன் டவுன் அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழர் நல்வாழ்வு பேரவை கத்தர் மண்டல தலைவர் மைதீன்ஷா தலைமை தாங்கினார், பொதுச்செயலாளர் மெளலவி. இம்ரான் உமரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
துவக்கமாக பேரவையின் மார்க்கச்செயலாளர் மெளலவி. ஷரஃபுத்தீன் உமரி இறைவசனம் வாசித்தார், பேரவையின் மக்கள் தொடர்பு செயலாளர் ஜஹாங்கிர் வரவேற்புரையாற்றினார், பேரவையின் தலைவர் மைதீன்ஷா தலைமை உரையாற்றினார், பேரவையின் துணை பொதுச்செயலாளர் சித்திக் பேரவையின் செயல்பாடுகளை எடுத்துரைத்தார், பேரவையின் பொருளாளர் இஸ்மாயில் நாகூர் பேரவையின் நீண்ட கால தொடர் சமூக நலப்பணிகளை விரிவாக எடுத்துரைத்தார்.
இதைத்தொடர்ந்து கத்தர் அயலக திமுக பொறுப்பாளர் சகோ ஆர் மதன் குமார் நமது எதிர்காலம் இளைஞர்கள் & புதிய உத்திகள் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார், இவருக்கு பேரவையின் மக்கள் தொடர்பு செயலாளர் ஆசாத் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.
இதைத்தொடர்ந்து தமிழ் துறை தலைவர் DPSMIS பள்ளி கத்தர் முனைவர் வாசுகி சத்திய பாபு பெண்களின் பெரும் பொறுப்பு என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார், இவருக்கு பேரவையின் துணைத் தலைவர் நாசர் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார், இதைத்தொடர்ந்து IWF சவூதி மண்டல ஒருங்கிணைப்பாளரும் ரியாத் மத்திய மண்டல தலைவர் மீமிசல் நூர் முஹம்மது* தேசத்தின் பன்முகமும் இன்றைய நிலையும் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார், இவருக்கு பேரவையின் தலைவர் மைதீன்ஷா நினைவு பரசு வழங்கி கௌரவித்தார்,
இதைத்தொடர்ந்து கத்தர் விசிக துணைச் செயலாளர் அதிரை உபையா வாழ்த்துரை வழங்கினார். இவருக்கு பேரவையின் மக்கள் தொடர்பு செயலாளர் முகமது முஸ்தபா நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார், அடுத்து கத்தர் முஸ்லீம் லீக் பொறுப்பாளர் முஹம்மத் ஷமீர் வாழ்த்துரை வழங்கினார். இவருக்கு பேரவையின் ஊடக பிரிவு செயலாளர அப்துல் காதர் பாஷா நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார், அடுத்து கத்தர் மதிமுக பொறுப்பாளர் பாலா வாழ்த்துரை வழங்கினார். இவருக்கு பேரவையின் மக்கள் தொடர்பு செயலாளர் சகோ முத்துப்பேட்டை நசீர் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார், அடுத்து கத்தர் சமூக ஆர்வலர் தஸ்தகீர் வாழ்த்துரை வழங்கினார். இவருக்கு பேரவையின் ஊடக பிரிவு செயலாளர சாகுல் ஹமீது நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.
இதைத் தொடர்ந்து பேரவையின் பணிகளைப் பற்றியும் நிகழ்ச்சியை பற்றியும் சிறப்பு பேச்சாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
தமிழர் நல்வாழ்வு பேரவை கத்தர் நீண்ட கால தொடர் சமூக நலப் பணிகளைப் பற்றியும், மக்கள் சேவைகளை பற்றியும், நிர்வாகிகளின் அணுகுமுறைகளை பற்றியும், கத்தர் அயலக திமுக பொறுப்பாளர் ஆர் மதன் குமார் மற்றும் தமிழ் துறை தலைவர் DPSMIS பள்ளி கத்தர் முனைவர் வாசுகி சத்திய பாபு மன நிறைவோடு மகிழ்ந்து பாராட்டினார்கள்.
பேரவையின் மக்கள் தொடர்பு செயலாளர் சுலைமான் நன்றி கூறினார்.
நிகழ்வில் பல்வேறு தமிழ் சமூக நல அமைப்புகள், ஜமாஅத்துகள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் & நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் குடும்பத்துடன் கலந்து சிறப்பித்தனர்.