By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
தூத்துக்குடிமாவட்டம்

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

Last updated: February 1, 2025 10:53 pm
February 1, 2025
75 Views
Share
SHARE

தூத்துக்குடி மாநகரில் இருபது ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத் அவருக்கு, தூத்துக்குடி மாநகரில் இருபது ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்படுவதாகவும், அவற்றின் தரத்தை பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில், உணவு பாதுகாப்புத்துறையை சம்பந்தப்பட்ட கடையை ஆய்வு செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். 

அதனடிப்படையில், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் டாக்டர்.மாரியப்பன் தலைமையில், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள், டேவிஸ்புரத்தில் உள்ள சம்பந்தப்பட்ட இருபது ரூபாய் பிரியாணி கடையின் தயாரிப்புக் கூடத்தினை  (27.01.2025) ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், பிரியாணிக்குப் பயன்படுத்திய கோழி இறைச்சியில் எந்தவிதமான துர்நாற்றங்களோ, வேற எவ்விதமான இயல்புக்கு புறம்பான அம்சங்களோ கண்டறியப்படவில்லை. 

இருப்பினும், அதிலிருந்து உணவு மாதிரி எடுத்து, பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தயாரிக்கப்பட்ட பிரியாணியும் உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. உணவு பகுப்பாய்வு அறிக்கை பெறப்பட்டவுடன் தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அதே வேளையில், உணவு தயாரிப்புக்கூடம் மிகவும் அசுத்தமாகவும், சமைக்கும் பகுதியில் பூனை, நாய் போன்ற பிராணிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்ததாலும், வாங்கிய மூலப்பொருட்கள் மற்றும் விற்பனை செய்த உணவுப் பொருட்களுக்கு உரிய பில்கள் இல்லாததாலும், உணவு பகுப்பாய்வு அறிக்கைகள் இல்லாததாலும், சமையலறை பாதுகாப்பற்று இருப்பதாலும், பொது சுகாதார நலனை முன்னிறுத்தி, அந்த உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமைத்தினை இடைக்கால ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆணை இன்று பிறப்பிக்கப்படும்மேலும், உணவு தயாரிப்புக் கூடத்தை சீர் செய்ய முன்னேற்ற அறிவிப்பு வழங்கப்பட்டு, அவற்றை சரி செய்த பின்னர் சம்பந்தப்பட்ட வணிகருக்கு உணவகத்தினை இயக்க அனுமதி வழங்கப்படும். மேலும், பிரியாணி பொட்டலத்தில் சிக்கன் பீஸ் சிதைந்த துகள்களாக இருப்பதால், சிக்கன் பிரியாணி என்ற வாசகம் நுகர்வோரைத் தவறாக வழி நடத்தும் என்பதினால், இதுகுறித்தும், இக்கடைக்கு சிக்கன் விற்பனை செய்த நிறுவனத்திடமும் விசாரணை மேற்கொண்டு, தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நுகர்வோர்களுக்கு உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகக் கட்செவி எண்ணிற்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் TN Food Safety என்ற புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவர்கள் ரகசியங்கள் காக்கப்படும்.

உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்ட நெறிமுறைகளை வணிகர்கள் பின்பற்ற தவறினால், மேற்கூறிய சட்டத்தின் கீழ் பறிமுதல், வியாபாரம் நிறுத்தம், நியமன அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலரிடத்தில் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு போன்ற கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்பதினால், சட்டத்திற்குட்பட்டு வணிகம் செய்து, வணிகத்தினை பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது. மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ச.மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

சட்ட விரோதமாக குடியிருப்பு பகுதியில் மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை
பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்
மயிலாடுதுறையில் உழைப்பாளர் தினத்தில் உழைக்கும் மக்கள் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் நீர் மோர் பந்தலை எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார்.
திருச்சியில் பி.எப் குறைதீர் கூட்டம் தேதி அறிவிப்பு
2,500 முகவர்கள் பங்குபெற்ற ஸ்டார் ஹெல்த் முகவர்கள் திருவிழா 2026
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

லால்குடி அருகே மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியல்

June 11, 2026
31 Views
பொது வேலை நிறுத்தம்; தொழிலாளர்கள் விரோத 4 சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறுக!
28 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்
ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா
மதுரை மாநகராட்சி CITIIS 2.0 ரூ.314.69 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account