ஈரோடு ஆனைக்கல் பாளையம் ஆயுதப்படை வளாகத்தில் குடியரசு தின விழா மாவட்ட நிர்வாகம் சார்பில் கொண்டாடப்பட்டது. அப்போது தேசியக்கொடியை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஏற்றி வைத்து மருத்துவத்துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர் களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



