ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் 76 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் பள்ளி தாளாளர் டாக்டர் பாபு அப்துல்லா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தலைமை ஆசிரியர் ஹாஜா முஹைதீன், உதவித் தலைமை ஆசிரியர் ஜாஹீர் உசேன் ஆசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவ மாணவிகளின் பேச்சு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



