சுசீந்திரம், ஜூன் 3 –
சுசீந்திரம் தாணு மாலய சுவாமி கோவிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் உடைய ஆஞ்சநேயர் சுவாமி சிலை உள்ளது. ஆஞ்சநேயர் பிறந்த நாளாக கருதப்படும் மூல நட்சத்திரத்தில் மாதம் தோறும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பின்பு 18 அடி உயரம் உடைய ஆஞ்சநேயருக்கு முழு வெள்ளிஅங்கி சாத்தப்பட்டு அலங்கார தீபாராதனை நடைபெறும்.
அதுபோல நேற்று மூல நட்சத்திரம் என்பதால் ஆஞ்சநேயருக்கு நறுமணப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்பு முழு உருவ வெள்ளிஅங்கி சாத்தப்பட்டு சிறப்பு அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் பெரும் அளவில் கலந்து கொண்டனர்.



