நாகர்கோவில் ஜன 7
குமரி மாவட்டத்தின் புதிய எஸ்.பி.,பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினை நேற்று நாகர்கோவில் எஸ்.பி., அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபர் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு, அமைதி மற்றும் வளர்ச்சிக்கான பயணத்தில் எங்கள் ஒத்துழைப்பு எப்போதும் இருக்கும் என்ற உறுதியை எஸ்.பி.,யிடம் மரிய ஜெனிபர் தெரிவித்தார்.
அப்போது கன்னியாகுமரி தொகுதி மாவட்ட தலைவர் தீபக் சாலோமன், மாவட்ட செயலாளர் மைக்கிள் எடில்பெர்ட், பொருளாளர் பன்னீர்செல்வம், செய்தி தொடர்பாளர் விஜேஷ்,இளைஞர் பாசறை நிர்வாகி ஜெய்வீன்,நாகர்கோவில் மாநகராட்சி 52 வது வார்டு பொறுப்பாளர் சுந்தரேசன் ஆகியோர் உடனிருந்தனர்.



