தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி, கயத்தாறு யூனியன் உள்பட்ட பன்னீர் குளம் கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்மட்ட குடிநீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அதனை மக்கள் பயன்பாட்டுக்கு மாவட்ட கவுன்சில் பிரியா குரு ராஜ் திறந்து வைத்தார், இந்நிகழ்வில் பன்னீர் குளம் பஞ்சாயத்து தலைவர் பேச்சியம்மாள் krs பொன்னுச்சாமி பாண்டியன் தலைமை வகித்தார், பன்னீர் குளம் வெள்ளத்துரை முன்னிலை வகித்தார், கொத்தனார் முருகன், சங்கர பாண்டியன், மாரிமுத்து, சொள்ளமுத்து, இமானுவேலு என்ற ஜெனி, ராஜாபுதுக்குடி திமுக கிளை செயலாளர் சதீஷ், பால்ராஜ், கயத்தாறு லோகேஷ் குமார், ஊர் பெரியவர்கள், பெண்கள், என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர், நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பன்னீர் குளம் திமுக கிளை செயலாளர் செல்வகுமார் செய்திருந்தார்



