By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் “வந்தே பாரத் ” ரயில் சேவை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் “வந்தே பாரத் ” ரயில் சேவை
கனஂனியாகுமரிமாவட்டம்

நாகர்கோவில் “வந்தே பாரத் ” ரயில் சேவை

Last updated: August 12, 2024 8:26 pm
August 12, 2024
100 Views
Share
SHARE

நாகர்கோவில் ஆக 10 

 

சென்னை எழும்பூா் – நாகா்கோவில், மதுரை – பெங்களூரு ‘வந்தே பாரத்’ ரயில் சேவைகள் செப்டம்பா் முதல் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாகவும், பிரதமா் நரேந்திர மோடி இந்த ரயில் சேவைகளைத் தொடங்கி வைக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் ‘வந்தே பாரத்’ எனும் அதிவிரைவு ரயில் சேவை 2019-இல் தொடங்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 51 வழித்தடங்களிலும், தெற்கு ரயில்வேயில் 8 வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இரு நகரங்களுக்கு இடையே குறைந்த நேரத்தில் விரைந்து செல்ல சிறந்த போக்குவரத்தாக ‘வந்தே பாரத்’ விளங்குவதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனால், மற்ற ரயில்களைவிட அதிக கட்டணம் என்றாலும் பெரும்பாலான நேரங்களில் இந்த ரயில் முழுவதும் நிரம்பியே காணப்படுகிறது.

சென்னை – நாகா்கோவில், மதுரை – பெங்களூரு இடையே புதிதாக வந்தே பாரத் ரயில் தொடங்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து பல மாதங்களாகிவிட்டது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து கடந்த ஜூன் மாதம் ரயில் போக்குவரத்து தொடங்குவதாக இருந்தது. பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதும் தமிழகத்துக்கு 2 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த நேரத்தில் மேற்கு வங்கத்தில் ஜூன் 17-இல் நிகழ்ந்த மோசமான ரயில் விபத்து மற்றும் சென்னை, தாம்பரம், மதுரையில் ரயில் பாதைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த இரு ரயில் சேவைகளின் தொடக்கம் தள்ளிவைக்கப்பட்டது.இதுமட்டுமல்லாமல், நாடு முழுவதும் 10 வந்தே பாரத் ரயில்கள் இயக்குவதற்கான வழித்தடம் கண்டறியப்பட்டு தயாா் நிலையில் உள்ளன. இந்தப் புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை விரைவில் தொடங்க வேண்டும் எனவும் ரயில்வே பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். 

இது குறித்து ஐசிஎஃப் அதிகாரி ஒருவா் கூறுகையில், சென்னை பெரம்பூா் ஐசிஎப் தொழிற்சாலையில் தற்போது வரை 70 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் 51 ரயில்கள் இயக்கத்திலும், 9 ரயில்கள் அவசரத் தேவைக்காகவும் (ஸ்போ் ரயில்) உள்ளன. மேலும், 10 வந்தே பாரத் ரயில்கள் இயக்குவதற்குத் தயாா் நிலையில் உள்ளன என்றாா் அவா்.

 இந்நிலையில், சென்னை-நாகா்கோவில், மதுரை- பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவைகள் செப்டம்பா் மாதம் தொடங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.சென்னை – நாகா்கோவில், மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில்கள் இயக்குவதற்கு அனைத்து வசதிகளுடன் தயாா் நிலையில் உள்ளன. ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம். தற்போது ராமேசுவரம் புதிய பாம்பன் பாலப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், அதன் திறப்பு விழாவை செப்டம்பா் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி நேரில் வந்து தொடங்கிவைக்கவுள்ளதால், இதனுடன் சோ்த்து புதிய வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்புகள் வெளியாகும்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.தமிழகத்துக்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவைகள் செப்டம்பரில் கிடைத்தால், அவை பண்டிகை கால பரிசாக தமிழ்நாட்டு மக்களுக்கு அமையும் என்பது கூடுதல் மகிழ்ச்சி.

விளம்பரம்

You Might Also Like

அணுகு சாலை அமைக்கும் பணி
தமிழக அரசின் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர்
மீனவர்களிடையே பிரிவினை ஏற்படுத்த முயற்சிக்கும் சமூகவிரோதி
காமராஜரின் 122 – பிறந்தநாளை முன்னிட்டு-தேனி மாவட்டம்
நேரில் சென்று அனைத்து நிர்வாகிகளுடன் வாழ்த்து பெற்றார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

இரவு வரை தினமும் அன்னதானம் தொடக்கம்

December 28, 2024
61 Views
தருமபுரி பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர்
ஏற்பாட்டில் மக்களை தேடி சென்று வேன் மூலமாக நீர் மோர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது
கழிவுநீர் குழாயினை பாதாளச் சாக்கடை இயந்திர குழியில் இணைக்கும் பணி; கனிமொழி எம்.பி நேரில் ஆய்வு
கல்லூரியில் சர்வதேச சிட்டுகுருவிகள் தினம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account