By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஐயப்பன் கோயில் மண்டல பூஜை கொடி ஏற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ஐயப்பன் கோயில் மண்டல பூஜை கொடி ஏற்றம்
இராமநாதபுரம்மாவட்டம்

ஐயப்பன் கோயில் மண்டல பூஜை கொடி ஏற்றம்

Last updated: December 18, 2024 10:40 am
December 18, 2024
37 Views
Share
SHARE

ராமநாதபுரம், டிச.18-


ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரத்தில் தென் தமிழகத்தின் சபரிமலை என்று அழைக்கப்படும் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. 

ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பூஜைகள் போன்று இங்கும் வெகு சிறப்பாக நடைபெற்று வருவதால் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயிலை தென் தமிழகத்தின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. 

சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜை போன்று இங்கும் மண்டல பூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. மண்டல பூஜை விழாவை முன்னிட்டு கணபதி ஹோமமும்,  அஷ்டாபிஷேகம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து தலைமை குருசாமி மோகன் கொடிமரத்தில் பூஜைகள் செய்து மண்டல பூஜை விழா கொடியை ஏற்றினார். தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி கொண்டனர். 

 மண்டல பூஜை முன்னிட்டு தினமும் அதிகாலை 4.15 மணிக்கு கணபதி ஹோமமும்  அஷ்டாபிஷேகமும் தீபாராதனை மற்றும் ஸ்ரீ பூதபலி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மண்டல பூஜை வரும் 26 ஆம் தேதி காலை நான்கு மணிக்கு கோ பூஜை உடன் துவங்கி கணபதி ஹோமம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஐயப்ப பக்தர்களும் காப்பு கட்டி விரதம் இருக்கும் பக்தர்களும் மணிகண்ட சுவாமிமார்களும் காலை 8 மணிக்கு வர்ணம் பொடியை பூசிக்கொண்டு ரெகுநாதபுரத்தில் இருந்து மேள தாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் பேட்டை துள்ளி வரும் நிகழ்ச்சியும் பின்னர் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயில் அருகே உள்ள பஸ்ம குளத்தில் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆராட்டு விழா பக்தர்களின் சுவாமியே… சரணம் ஐயப்பா… என்ற கோஷம் விண்ணை முட்டும் அளவிற்கு எழும்ப வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. பின்னர் கொடி இறக்கம் நடந்த பின்னர் மகா அபிஷேகம் நடைபெறும். மண்டல பூஜை 

விழாவில் பங்குபெறும் பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்படும். 

மண்டல பூஜை விழா ஏற்பாடுகளை தலைமை குருசாமி மோகன் தலைமையில் ஸ்ரீ வல்லபை ஐயப்பா சேவை நிலையம் அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர். மண்டல பூஜை முன்னிட்டு ராமநாதபுரத்தில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

விளம்பரம்

You Might Also Like

விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம்; நாகர்கோவிலில் 2 நாள் போக்குவரத்து மாற்றம்
கள்ளுக்கடையை திறக்க கோரி ஆர்பாட்டம்
விவசாயிகள் குறைதீர் நாளில்வலியுறுத்தல்
இணையதள தொழில்நுட்பங்கள் நகைகடை கொள்ளை
பசுமை வளத்தை மேம்படுத்த மரக்கன்று நடும் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சுவாமி கோவிலில் மக்கள்மார் சந்திப்பு

January 8, 2025
42 Views
தூத்துக்குடியில் காமராஜரின் பிறந்த நாள் விழா
வேலை வாய்ப்பு முகாம்
கோட்டாரப் பட்டிக்கு புதிய பஸ் வசதி
தேசிய தர நிர்ணய சான்றிதலுக்கான மதிப்பீட்டாய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account