வேலூர்=05
வேலூர் மாவட்டம், வேலூர் அடுத்த.விருதம்பட்டில் தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின் 23 வது கிளை திறப்பு விழா நடைபெற்றது.. இம்மருத்துவமனையில் அதிநவீன லேசர் கண்புரை சிகிச்சை முறை, குளுக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய்க்கான சிகிச்சை ,மாறு கண் சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை ,கண் காயத்திற்கான சிகிச்சை, கண் நரம்பியல் ,ஆப்டோமெட்ரி மற்றும் முழுமையான கண் கண்ணாடி சேவை மற்றும் ஆரம்ப கால சிகிச்சை சலுகையாக இரண்டு மாதத்திற்கு இலவச முழு கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் பொதுமக்களுக்கு வழங்குகின்றனர். உடன் தி ஐ ஃபவுண்டேஷன் தலைவர் டாக்டர் டி.ராமமூர்த்தி, நிர்வாக இயக்குனர் டாக்டர் ஷ்ரேயாஸ், டாக்டர் மாதவி, பொது மேலாளர்கள் உலகநாதன், கிருஷ்ணகுமார் ,உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.