தென்தாமரைகுளம், அக்.4-
இந்து முன்னணி முன்னாள் மாநில தலைவர் தாணுலிங்க நாடாரின் 36-வது நினைவு தினம் கன்னியாகுமரி அருகே பொற்றையடியில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாவட்டத் தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். மாநில பேச்சாளர் எஸ். பி. அசோகன், மாவட்ட ஆலோசகர் மிசா சோமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாணுலிங்க நாடார் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு சிவச்சந்திரன் சுவாமிகள், வழக்கறிஞர் ராஜரத்தினம்,, மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் சிவக்குமார், தாணுலிங்க நாடாரின் மகள்கள் கற்பகம், தமயந்தி, அகஸ்தீஸ்வரம் ஒன்றிய இந்து முன்னணி தலைவர் செல்வன், பொதுச்செயலாளர் எம்.ஆர்.சிவா, பொருளாளர் பொன்னையா, துணைத்தலைவர் சுரேஷ் குமார், செயலாளர் சுபாஷ் விஜயன் உள்பட பலர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.