தருமபுரி மாவட்டம், தருமபுரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை பொது கூட்டம் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தர்மபுரி மாவட்டம் , தருமபுரி ஊராட்சி ஒன்றியம், கே. நடுஅள்ளி ஊராட்சியில் தலைவர் தலைமையிலும் மற்றும் கடகத்துர்ஊராட்சியில் செயலாளர் தலைமையிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.



