காளையார்கோயில் செப்:19
சிவகங்கை மாவட்டம் காளையர்கோவில் ஒன்றியம் கொல்லங்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மாவட்ட பயிலரங்கம் நடைபெற்றது.
சிவகங்கை பாஜக மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி தலைமையில் உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்
காளையார் கோவில் அழகாபுரி கொல்லங்குடி புளியடி தம்பம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உறுப்பினர் சேர்க்கையை மத்திய அமைச்சர் ஆய்வு செய்தார். அதன் பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எதிர்கொள்ளும் வகையில் உறுப்பினர்கள் சேர்க்கை அதிகப்படுத்த வேண்டும் ஒவ்வொரு ஒன்றியத் தலைவர் மற்றும் கிளைத் தலைவர்கள் அந்தந்த பகுதியில் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த அயராது உழைக்க வேண்டும் பாரதிய ஜனதா கட்சியில் இளைஞர்கள் அதிக அளவில் புதிய உறுப்பினர்களாக சேர்ந்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.
இந்த பயிலரங்க கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் மார்த்தாண்டன் ஒன்றிய தலைவர்கள் ராஜா கதிரவன் மயில்சாமி பில்லப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



