திருப்பூர், ஆக. 25 –
காங்கேயம் ரோடு நொய்யல் வீதி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் சக்கரை, உயர் ரத்த அழுத்த மருத்துவம், முழு உடல் பரிசோதனை 10% DISCOUNT,
அறுவை சிகிச்சை மருத்துவம், முழு உடல் பரிசோதனைகள் நடைபெற்றது. முகாமினை திமுக மத்திய மாவட்ட செயலாளர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ், டி கே டி மூ. நாகராஜன், பகுதி செயலாளர் மு.க. உசேன் துவக்கி வைத்தார்.
மாவட்டத் தலைவர் S. பாபு (எ) பக்கீர் முஹம்மது தலைமையில் செயலாளர் M. உமர் பாரூக், பொருளாளர் ஹக்கீம், சிறப்பு அழைப்பாளர்கள் மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழக நிறுவனர் எஸ். இப்ராஹிம் பாதுஷா, மாவட்ட செயலாளர் அபுதாஹிர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்ட தலைவர் நசுருதீன், செயலாளர் அப்பாஸ், அன்னை சகோதர சமுதாய அறக்கட்டளை நிறுவனர் சஜினா பேகம், பொதுச்செயலாளர் அமிர்தஸ்தகீர் ( எ) பாபுஜி விசிக அபு, மக்கள் நீதி மையம் ஜீவா, வெல்போர் பார்ட்டி மாவட்ட தலைவர் ரிஜ்வான். ஆண்கள், பெண்கள் என அப்பகுதியின் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.



