தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் காந்திராஜன் (வேடசந்தூர்) தலைமையில் ,தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் முன்னிலையில் முன்னிலையில் நடைபெற்றது.
பின்னர் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் காந்திராஜன் தெரிவித்ததாவது
தென்காசி மாவட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலன் கால்நடை பராமரிப்பு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் கூட்டுறவு நெடுஞ்சாலைகள் சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் இந்து சமய அறநிலையங்கள் வனம் இயற்கை வளங்கள் ஆகிய அரசுத்துறைகளின் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகைகள் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் திட்டத்தின் காலவரம்பு அதன் பயன் அத்திட்டத்தின் செயல்முறை வளர்ச்சி மற்றும் தற்போதைய நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் காந்திராஜன் தெரிவித்தார்.
மேலும் கூட்டுறவுத்துறையின் மூலம் 58 மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு ரூ.4.48 கோடி மதிப்பிலான கடனுதவிகளையும், 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.10 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும், 204 பயனாளிகளுக்கு ரூ.2.02 கோடி மதிப்பிலான கடனுதவிகளையும், 1 பயனாளிக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பிலான கைம்பெண் கடனுதவியினையும், ஒரு பயனாளிக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணையினையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் ரூ.2.20 கோடி மதிப்பில் 16 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் மற்றும் 14 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் காந்திராஜன் வழங்கினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் சட்டமன்ற பேரவை உறுப்பினர்கள் அம்பேத்குமார் (வந்தவாசி) , கரு மாணிக்கம் (திருவாடானை) , டாக்டர் சதன்திருமலைக்குமார் (வாசுதேவநல்லூர்) , சின்னதுரை (கந்தர்வ கோட்டை) , ராமச்சந்திரன் (சேவூர்) , பன்னீர் செல்வம் (சீர்காழி) , பாலாஜி (திருப்போரூர்) , மணியண்(வேதாரண்யம்) , ராஜா(சங்கரன்கோவில்) , வெங்கடேஷ்வரன் (தர்மபுரி) , மாவட்ட வன அலுவலர் முருகன், மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் , மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் , தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் , கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி மற்றும் முதன்மைச் செயலாளர் சீனிவாசன், கூடுதல் செயலாளர் பாலசுப்பிரமணியம், துணைச்செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.