கன்னியாகுமரி,ஆக.19
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வித்யாலயா பள்ளியில் 1986 முதல் 1999 கல்வி ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று கேந்திர வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்துரையாடல் ,விளையாட்டு போட்டி உள்ளிட்டவை நடைபெற்றன. மாணவர்கள் அனைவரும் ஒரே நிற ஆடை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.போட்டிகளில் வெற்றி பெற்ற முன்னாள் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
நிறைவாக கல்வி ஆண்டில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி முன்னாள் மாணவர்கள் கவுரவித்தனர்.