சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நகர் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பெரிய ஊராகும் திருப்புவனத்தை சுற்றி நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு கிராமத்து மக்கள் அனைவரும் தினசரி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க திருப்புவனம் வந்து செல்வது வழக்கம் இதனால் எப்பொழுதுமே திருப்புவனம் மிகவும் பரபரப்பான நகரமாகவே காணப்படும் இதனால் இங்கு வர்த்தக சங்கத்தினர் சார்பாக நகரின் முக்கியமான இடங்களில் எட்டு அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு அதனுடைய கண்ட்ரோல் அறை புறநகர் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கேமரா கண்கானிப்பு அறையை மானாமதுரை காவல்துறை துணை கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார். அப்பொழுது திருப்புவணம் நகர் வர்த்தக சங்க பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் திருபுவனம் காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.



