அரியலூர்,ஜூலை:22
அரியலூர் மாவட்ட தேமுதிக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர் இராம.ஜெயவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் மாவட்ட கழக அவைத் தலைவர் வேல்முருகன் மாவட்ட கழக பொருளாளர் சக்திவேல் மாவட்ட துணைச் செயலாளர்கள் தெய்வசிகாமணி, புல்லட் ரவி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன் பொதுக்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், கருப்பையா, மோகன், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தேமுதிக கட்சியின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் வரும் காலங்களில் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட வேண்டும். ஒவ்வொரு கிராமங்களிலும் மக்களின் மனதில் இடம் பிடித்த கேப்டன் அவர்களின் நினைவோடு மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிட வேண்டும். தமிழகம் முழுவதும் உயர்ந்து வரும் விலைவாசி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வு , போதை இல்லாத தமிழகத்தை உருவாக்கிட , அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடையில் தடை இல்லாமல் வழங்கிட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசுக்கு தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டன.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.



