மதுரை ஜூலை 17
மதுரை ரயில்வே கோட்டம் அலுவலக செய்தி குறிப்பில் இது தொடர்பாக கூறியிருப்பதாவது.
பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க திருநெல்வேலியில் இருந்து கொல்கத்தா ஷாலிமார் ரயில் நிலையத்திற்கு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி – ஷாலிமார் வாராந்திர சிறப்பு ரயில் (06087) திருநெல்வேலியில் இருந்து ஜூலை 18 மற்றும் 25 ஆகிய வியாழக்கிழமைகளில் அதிகாலை 01.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 09.00 மணிக்கு ஷாலிமார் சென்று சேரும் மறு மார்க்கத்தில் ஷாலிமார் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (06088) ஷாலிமாரிலிருந்து ஜூலை 20 மற்றும் 27 ஆகிய சனிக்கிழமைகளில் மாலை 05.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 01.15 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்
இந்த ரயில்களில் 2 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் 17 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 ரயில் மேலாளர் பெட்டியுடன் கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில் பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்கள் கோவில்பட்டி விருதுநகர் மானாமதுரை சிவகங்கை காரைக்குடி புதுக்கோட்டை திருச்சி விருத்தாச்சலம் விழுப்புரம் திருவண்ணாமலை வேலூர் கண்டோன்மெண்ட் காட்பாடி அரக்கோணம் பெரம்பூர் நெல்லூர் ஓங்கோல் விஜயவாடா எலுரு ராஜமுந்திரி சாமல் கோட் துவ்வாடா சிமாச்சலம் வடக்கு பென்டுர்டி கோட்ட வலசா விஜயநகரம் ஸ்ரீ கா குளம் ரோடு பலாசா பிரம்மாபூர் குர்தா ரோடு புவனேஸ்வர் கட்டாக் ஜஸ்பூர் கியான்ஸ்ஹர் பட்ரக் பாலேஸ்வர் கரக்பூர் சந்தர காச்சி ஆகிய ரயில் நிலையங்கள் நின்று செல்லும் இந்த ரயில்களில் உள்ள இரண்டு முன்பதிவு பெட்டிகளுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.