மழை வெள்ள பாதிப்பிற்கு பின்னர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சைப் பிரிவு அதிநவீன வசதிகளுடன் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக டாக்டர் எம்.ரீட்டா ஹெப்சி ராணி மற்றும் மருத்துவர் குழுவினர் அளித்த பேட்டியில், “2001ம் ஆண்டு நமது முத்து நகரில் ஆரம்பிக்கப்பட்டு 23 வயதை எட்டும் நம் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி கண் சிகிச்சைப் பிரிவில் மருத்துவச் சிசிச்சைகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.
நவீன கண் புரை அறுவை சிகிச்சை (Cataract Surgery) மட்டுமல்லாமல் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை (Keratoplasty) கண் பட்டை இறங்கி இருப்பதை சரி செய்தல் (Ptosis Surgery), கண் இமை சீரமைத்தல் (Eye Lid reconstruction Surgery), கண்ணீர் அழுத்த அறுவை சிகிச்சை (Trabeculectomy), சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புக்களை குணப்படுத்தும் லேசர் சிகிச்சை மற்றும் கண்ணுக்குள் ஏற்படும் ரத்தக் கசிவை சரிசெய்ய Intravitreal Injection செலுத்தும் முறை பிறவி கண் பூ விழுந்து மற்றும் கருவிழி அறுவை சிகிச்சை செய்ய இயலாதவர்களுக்கு அழகியலுக்காக (Cosmetic, Corneal Tattooing), செயற்கை கண் பொருத்துதல் சிகிச்சை முறையும் மேற் கொள்ளப்படுகிறது.
2023ம் ஆண்டு பெய்த பெருமழை வெள்ளத்தினால் கடுமையாக நமது மருத்துவப் பிரிவு பாதிக்கப்பட்டதை மருத்துவக் கல்லூரி முதல்வர் G. சிவக்குமார் பெரும் முயற்சியினால் புதிதாக அமைந்துள்ள கண் சிகிச்சை பிரிவில் மருத்துவர் எம்.ரீட்டா ஹெப்சி ராணி தலைமையில் பவானி ப்ரீத்தி, சி.லலிதா, பஸ்தா போன்ற மருத்துவ குழுவினருடன் மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்பட்டு வருகிறது.
“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற முதுமொழிக்கேற்ப எம் மருத்துவர்கள் அனைவரும் சிறப்பாக சேவை செய்து வருகின்றார்கள். எனவே நமது தூத்துக்குடி மாவட்ட மக்கள் அனைவரும் இந்த சேவையை முழுமையாக பயன்படுத்துமாறு தெரிவித்தனர். பேட்டியின் பேட்டியின் போது மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, மருத்துவ கண்காணிப்பாளர் மரு.பத்மநாயகம் மருத்துவ துணை கண் காணிப்பாளர் மருத்துவர்.குமரன், மற்றும் துறை மருத்துவர்கள், பணியாளர்கள் அலுவலர் கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.