நாகர்கோவில் ஜூன் 24
கன்னியாகுமரி மாவட்டம் தெள்ளாந்தி ஊராட்சியில் 15 ஆண்டுகளாக பழுதடைந்து கிடக்கும் உடையடி கிராமம் முதல் தென்பாறை வரை உள்ள சாலையும், தெள்ளாந்தி காலனி முதல் கேசவநேரி வரை உள்ள சாலையையும், சீரமைக்க கோரி 4 ஆண்டுகளுக்கு மேலாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், சீரமைக்கப்படாததால் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி
மத்திய அரசு நல திட்ட பிரிவு மாவட்ட துணை தலைவர் ரஜினிகாந்த் தலைமையில் , கிளை 25 மற்றும் 26 பொறுப்பாளர்கள் அர்ஜுனன், கணேசன், விஜய் முபின் முன்னிலையில் வாழை மரம் நடும் போராட்டம் நடைபெற்றது.
இதில் ஒன்றிய நிர்வாகி செல்வம் ,ஒன்றிய பொதுச் செயலாளர் ராஜா சிங் ,ஒன்றிய தலைவர் மகாதேவன் மாவட்ட தொழில் பிரிவு துணைத் தலைவர் ரங்கநாதன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.