திருப்பத்தூர்:பிப்:11, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட தொழில் மையத்தின் வாயிலாக புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் வட்டி மானியத்தின் கீழ் இரண்டு நபர்களுக்கு ரூபாய் 4. 79 லட்சம் மதிப்பீட்டில் வட்டி மானியம் மற்றும் தனிநபர் மானியத்தின் கீழ் இரண்டு நபர்களுக்கு ரூ.39.92 இலட்சம் மதிப்பீட்டில் தனி நபர் மானியம் என மொத்தம் 4 நபர்களுக்கு ரூ.44.71 இலட்சம் மதிப்பிலான மானியத் தொகை பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.க.சிவ சௌந்தரவல்லி இ.ஆ.ப., வழங்கினார் உடன் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.



