மயிலாடுதுறை காவேரி துலாக் கட்டத்தில் துலா உற்சவத்தை முன்னிட்டு காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தினர் விழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி நவம்பர் 16 , 17 , 23 , 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் முகாம்களில் பங்கேற்று பயனடையுமாறு அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து முகாமில் பங்கேற்று பயனடைய தேவையான சான்றுகள் குறித்த விவரங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பொதுமக்கள் அனைவருக்கும் நிர்வாகிகள் வழங்கினர். பின்னர் மாவட்ட செயலாளர் தளபதி அமின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் குட்டி கோபி கலந்து கொண்டு பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களை நேரில் அழைத்து குடை மற்றும் நோட்டீஸ் , பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக துணி பை உள்ளிட்டவற்றை நிர்வாகிகள் வழங்கினர். பின்னர் மயிலாடுதுறை நகரப் பகுதி முழுவதும் வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் தொடர்பான முகாம் குறித்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ சேவையை துவக்கி வைத்தனர். அப்போது மாவட்ட மாணவரணி தலைவர் பிரபஞ்சன், நகரப் பொறுப்பாளர் ஆசிப், நகர செயலாளர் அம்பேத் , மற்றும் நகர நிர்வாகிகள் ஹரிஹரன், ரோகித், மற்றும் கழகத் தோழர்கள் உடனிருந்தனர்.



