By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “SIR ஒரு வாக்கு திருட்டு” – ப.சிதம்பரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > “SIR ஒரு வாக்கு திருட்டு” – ப.சிதம்பரம்
சிவகங்கைதமிழ்நாடு

“SIR ஒரு வாக்கு திருட்டு” – ப.சிதம்பரம்

Last updated: September 28, 2026 2:41 pm
September 28, 2026
20 Views
Share
SHARE

சிவகங்கை, செப். 28:

தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய ப.சிதம்பரம், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் ஜனநாயகத்தின் அடிப்படை என தெரிவித்தார். முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் தேர்தல் நடைமுறையில் பல்வேறு சீர்கேடுகளை நிவர்த்தி செய்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் செயல்பாடுகள் குறித்து நாடு கேள்வி எழுப்புவதாக கூறினார்.

மேலும், வாக்குரிமை என்பது எந்தவொரு குடிமகனுக்கும் மறுக்க முடியாத உரிமை என்றும், 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டதும், பின்னர் 18 வயதாக குறைக்கப்பட்டதும் குறித்து அவர் பேசினார்.

SIR எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை விமர்சித்த ப.சிதம்பரம், பல்வேறு கட்டங்களில் கோடிக்கணக்கான வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். மேற்கு வங்கத்தில் வாக்காளர் நீக்க நடவடிக்கைகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளில் கணிசமான எண்ணிக்கையிலானோர் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனை அடிப்படையாகக் கொண்டு, நாடு முழுவதும் SIR நடவடிக்கையால் நீக்கப்பட்ட வாக்காளர்கள் மேல்முறையீடு செய்தால் பெரும் எண்ணிக்கையிலானோர் மீண்டும் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக ப.சிதம்பரம் கூறினார். SIR நடவடிக்கை ஜனநாயகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறிய அவர், தேர்தல் ஆணையம் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் SIR முடிவு தொடர்பாக கேட்கப்பட்டபோது, அந்த முடிவை எடுத்ததற்கான குறிப்பிட்ட கோப்பு இல்லை என தேர்தல் ஆணையத்தின் செயலாளர் தெரிவித்ததாக ப.சிதம்பரம் கூறினார். இதனை அவர் கடுமையாக விமர்சித்ததுடன், SIR நடவடிக்கையை “வாக்கு திருட்டு” என விமர்சித்தார்.

காரைக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவையில் அமைச்சர் வன்னி அரசு ஆய்வு
துறையூர்: கிராவல் மண் எடுத்துச் சென்ற டிராக்டர் டிரைவர் கைது
திங்கள்நகரில் வீடு தேடி ரேசன் பொருட்கள் வழங்கல்; மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு
பாலக்கோடு அருகே அரசு நகர பேருந்து மீது புளிமரம் சாய்ந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்
ஈரோடு மாவட்டத்தில் 2 இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவில் அருகேவிஷம் குடித்து குளத்தில்இறங்கி பெண் தற்கொலை

May 27, 2025
68 Views
பல்லடம் சாலை பணி அமைச்சர் துவக்கி வைத்தார்
உறவுகள் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் ஏழை எளியவருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா
பலத்த காற்றில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
மார்த்தாண்டம் காவல் நிலையம் முன்பு ஆட்டோவை சேதப்படுத்திய வாலிபர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account