கோவை, மே 30 –
கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர், வெள்ளலூர், சுங்கம் மகளிர் விடுதி, பாலசுந்தரம் சாலை கல்லூரி மாணவர் விடுதி, பட்டணம் ஆகிய பகுதிகளில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிரி பிரசாத் பாலசுந்தரம் சாலையில் உள்ள சமூக நீதி விடுதியில் மாணவர்களுக்கு வழங்கும் உணவினை உணவறிந்து ஆய்வு செய்தனர். உடன் தாட்கோ உயர் அதிகாரிகள், ஆதி திராவிடர் நலப்பிரிவு அதிகாரிகள் மற்றும் இத்துறை சார்ந்த அலுவலகர்கள் கலந்து கொண்டனர்.



