சென்னை, செப். 3:
கருவுறுதல் சிகிச்சையை நோயாளிகளின் வீடுகளுக்கே கொண்டு செல்லும் வகையில், பிரசாந்த் பெர்ட்டிலிட்டி மருத்துவமனையில் “பிரசாந்த் பெர்ட்டிலிட்டி அட் ஹோம்” என்ற புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடிகை குஷ்பு சுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சேவையை தொடங்கி வைத்தார்.
பிரசாந்த் மருத்துவமனைகள் குழுமத் தலைவர் டாக்டர் கீதா ஹரிப்ரியா, இயக்குனர் டாக்டர் சம்ஹிதா மோடூரி ஆகியோர் பங்கேற்றனர். இந்த சேவை மூலம் மருத்துவர்களின் கண்காணிப்பில் வீட்டிலிருந்தபடியே தேவையான ஐ.வி.எஃப். சிகிச்சை தொடர்பான சேவைகளை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, வேலைக்குச் செல்லும் தம்பதிகள் மருத்துவமனைக்கு அடிக்கடி செல்ல முடியாதது அல்லது உரிய நேரத்தில் ஊசி செலுத்த முடியாதது போன்ற காரணங்களால் சிகிச்சை தடைபடுவதை தவிர்க்க இந்த சேவை உதவும் என டாக்டர் கீதா ஹரிப்ரியா தெரிவித்தார்.



