அரியலூர், ஜூன்:15
உலக முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தையொட்டி, அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உறுதி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊராட்சி மன்றத் தலைவர் அம்பிகா மாரிமுத்து, துணை தலைவர் பழனி அம்மாள், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் அகிலா ஆகியோர் முதியோர்களுக்கு பொன்னடை போர்த்தி கௌரவித்தனர்.
பின்னர் ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் முதியோர்களை பாதுகாப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.



