ஈரோடு, அக். 14 –
ஈரோடு மாவட்டம், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயவிலில் ரூ.6.70 கோடி மதிப்பீட்டில் 3.9 கி.மீ நீளத்திற்கு சீரமைக்கப்பட்ட மலைப்பாதை தார்சாலை, ரூ.64 இலட்சம் மதிப்பீட்டில் பேருந்து காத்திருப்புக்கூடம் மற்றும் ரூ.93.00 இலட்சம் மதிப்பீட்டில் பசுமடம் ஆகியவற்றை கானொலி காட்சி வாயிலாக முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டார்.
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி, திருப்பூர் மாநகராட்சி 4- மண்டல தலைவர் பத்மநாபன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் சுகுமார், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா, செயல் அலுவலர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



