ஈரோடு ஜன.9
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் எச். எம். இ.
திட்டத்தின் கீழ் நெசவாளர்கள் மற்றும் வியாபாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி பவானியில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கைத்தறி துறையின் முக்கிய சவால்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது கைத்தறி தயாரிப்புகள் விற்பனைக்கு சமுக்காள சந்தையில் ஏற்படும் சிரமங்கள் மற்றும் சிக்கல்கள் பற்றி விரிவாக விளக்கி கூறப்பட்டது.
இதில் கலந்து கொண்ட நெசவாளர்களும் வியாபாரிகளும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து இந்த துறையின் முன்னேற்றத்திற்கு தேவையான பயிற்சிகள் மற்றும் வழிகாட்டல் உதவிகளை வலியுறுத்தினர்.
இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எச் எம் ஐ திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சங்கர் திட்டத்தின் நோக்கம் மற்றும் பயிற்சிகள் குறித்து விளக்கி பேசினார்.



