திருப்பூர், ஆக. 03 –
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக திருப்பூர் மாநகராட்சி அருகில் தீரன் சின்னமலை கவுண்டர் 221வது நினைவு நாள் தினம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
திருப்பூர்மாவட்டம், காங்கயம் வட்டம், சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தார். இவரின் தந்தையார் ரத்னசாமி கவுண்டர் (பயிரன் கூட்டம்), மற்றும் தாயார் பெரியாத்தா (ஓதாலன் கூட்டம்) ஆகியோர் ஆவர். இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர் ஆகும். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூறப்படுகிறது. இதனால் இவர் இளம்பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார்.
தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம்,
போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார். இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். இன்றைய கேரளத்திலும், கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்று சேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம், தெற்கு மாவட்ட செயலாளர் வேலுமணி தலைமையில், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் கொங்கு சந்தோஷ், பேரவை தலைவர் கோல்டன் சண்முகம், செல்வி ஜெராக்ஸ் மணிமாறன், மாவட்ட தொண்டரணி செயலாளர் கார்த்திகேயன், நல்லூர் பகுதி செயலாளர் பிரகாஷ், மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.



