திருவள்ளூர், ஜூலை 31 –
திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பயிர் கடனை தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என இரு கண்களை கட்டிக்கொண்டு கோசமிட்டு வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா, தலைமையில் மாதாந்திர விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு மற்றும் மின் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர். இதில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டன.
அப்பொழுது திருத்தணி அடுத்த ஆர்கே பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாயிகளின் பயிர் கடன்களை தமிழக அரசே முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதாவிடம் கோரிக்கை மனு அளித்த நிலையில் கண்களை கருப்பு துணையால் கட்டியபடி விவசாய நலன் கூட்டத்தில் கண்டன கோஷம் எழுப்பியவாறு கூட்டத்தை புறக்கணிக்கத்து வெளிநடப்பு செய்தனர். இதனால் விவசாய நலன் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.



