சேலம், ஜூலை 31 –
சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அபிநவம் மற்றும் ஏற்காடு ஏகலைவா உண்டு உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை 2026 -2027 ம் ஆண்டிற்கான காலியாக உள்ள பட்டதாரி / முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத காலிபணியிடங்களை தற்காலிகமாக நிரப்பும் பொருட்டு பணி நாடுனர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில் SC&ST இனத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அதன்படி ஸ்போக்கன் இங்கிலீஷ் (முதுநிலை) பணிக்கு 2 நபர்கள், ஸ்போக்கன் இங்கிலீஷ் இளநிலை பணிக்கு 2 நபர்கள், இசை ஆசிரியர் பணி 2 நபர்கள், ஆர்ட் டீச்சர் பணிக்கு 1 நபர், கவுன்சிலர் பணிக்கு 2 நபர்கள், ஸ்டாஃப் நர்ஸ் பணிக்கு 2 நபர்கள், ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு 3 நபர்கள், ஓட்டுனர் பணிக்கு 1 நபர், அலுவலக உதவியாளர் பணிக்கு 1நபர், தூய்மை பணியாளர் பணிக்கு 1 நபர் என மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத தொகுப்பு ஊதிய பணியாளர்கள் 2026 – 2027 கல்வி ஆண்டு முடியும் வரை மட்டுமே பணியில் தொடர முடியும் என்பதால் தற்காலிக பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தகுதியான நபர்கள் தங்களது விண்ணப்பங்களை சேலம் மாவட்ட ஆட்சியரகம் மூன்றாவது தளத்தில் உள்ள அறை எண் 305 -ல் செயல்பட்டு வரும் பழங்குடியினர் நல திட்ட அலுவலகத்தில் வருகிற 06.08. 2026க்குள் சமர்ப்பிக்குமாறு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.


