திருப்பத்தூர், ஜூலை 28 –
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னேரி ஊராட்சி, முதலைமேடு பகுதியில், வளர்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்தின்கீழ் (VB -GRAM – G). ரூ.7.30 இலட்சம் மதிப்பீட்டில், பண்ணைக்குட்டை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணியின் தரம், முன்னேற்றம் மற்றும் திட்டமிட்ட காலத்திற்குள் பணியை நிறைவு செய்ய வேண்டிய அவசியம் குறித்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் இத்திட்டம் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றும், பணிகளை தரமான முறையில் விரைந்து நிறைவேற்றுமாறும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி அருள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தஹரிகுமார். சங்கர், ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் முருகேசன் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.



