தஞ்சாவூர், ஜூன் 8 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் 13 நிரந்தர நெல் கொள்முதல் நிலைய கட்டிடங் கள் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு, தயார் நிலையில் உள்ளன என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் தெரிவித்தார்.
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் திறந்த வெளி நெல் சேமிப்பு கிடங்கு, சோழன் மாளிகை நேரடி நெல் கொள்முதல் நிலையம், கோட்டையூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்து அமைச்சர் வினோத் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பட்டீஸ்வரத்தில் 30 ஆயிரம் டன் மேல் கொள்ளளவு கொண்ட திறந்த வெளி சேமிப்பு கிடங்கில் தற்போது 25 ஆயிரம் டன் நெல் உள்ளதால், மேலும் 5, ஆயிரம்டன் மட்டுமே சேமிக்க முடியும். எனவே நடப்பு முற்பட்ட குறுவை பருவத்தில் கொள் முதல் செய்யப்பட உள்ள 3 லட்சம் டன் நெல்லை பாதுகாப்பாக சேமித்து வைக்க வேண்டும். இம்மையத்தில் 250 நெல் அட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. திடீர் மழை ஏற்பட்டால் அனைத்து அட்டிகளை யும் உடனடியாக தார்ப்பாய் கொண் டு மூடப் போதிய சுமை பணியாளர் களை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணாபுரத்தில் மாநகராட்சி சொந்தமான 50 ஏக்கர் நிலத்தை திறந்தவெளி நெல் சேமிப்பு மைய மாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவும், தண்டந்தோட்டம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை குத்தகை அடிப்படையில் பெற்று நிரந்தர நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கவும், தேவையான நடவடிக்கைகளை விரைவுப்படுத்தவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2024 -2025 ஆம் ஆண்டில் தமிழ கத்தில் 50 நிரந்தர நெல் கொள் முதல் நிலைய கட்டிடங்கள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் தலா ரூபாய் 30 லட்சத்தில் 13 கொள்முதல் நிலைய கட்டிடங்கள் கட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, தயாராக உள்ளன. கொட்டையூர் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் ரூபாய் 2.20 கோடியில் கட்டப்பட்டு வரும் 1,000 டன் கொள் ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடந்து கட்டுமான பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் செல்வம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்



