தருமபுரி, ஜூலை 20 –
தருமபுரி நகர எஸ். வி. ரோடு குப்பையன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி சொர்ணமுத்து மாரியம்மன் திருக்கோவிலில் உள்ள ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தெய்வானை உடனாகிய ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், தீபாரதனைகள் நடைபெற்றது.
இதை தொடர்ந்து ஊர் பொதுமக்கள் சார்பில் வளையல், மாங்கல்ய கயிறு, குங்குமம், மஞ்சள், விபூதி, பழங்கள் மற்றும் வெள்ளம், வருகடலை ஆகியவைகளை சீர்வரிசையாக எடுத்து ஊர்வலமாக வந்தனர். பிறகு கணபதி ஹோமம், தீபாரதனைகள் செய்யப்பட்டு ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தெய்வானை சமேத ஶ்ரீ சிவசுப்பிரமணியசாமி திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் நகர பகுதியில் உள்ள பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கோவில் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



