By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேலம் மாவட்டத்தில் “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சேலம் மாவட்டத்தில் “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டம்
சேலம்தமிழ்நாடு

சேலம் மாவட்டத்தில் “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டம்

Last updated: July 17, 2026 5:13 pm
July 17, 2026
2 Views
Share
SHARE

சேலம், ஜூலை 17 –

பொதுமக்களின் இடங்களுக்கே சென்று குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கு சென்று பணியாற்றும் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் சேலம் மாவட்ட பொதுமக்களின் குறைகளை கேட்டு அறியும் திட்டமான உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாம் இன்றைய தினம் சேலம் மாவட்டம் மேட்டூரில் தொடங்கப்பட்டது. மேட்டூர் வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களில் மாவட்ட அளவிலான அனைத்து துறை அரசு அலுவலர்கள் இரண்டு தினங்கள் கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேட்டூர் வட்டத்தில் களப்பணிக்கு செல்லும் அலுவலர்களால் இன்றைய தினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், சத்துணவுக் கூடங்கள், வேளாண் கிடங்குகள், பள்ளிகள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம், தெருவிளக்குகளின் செயல்பாடுகள், பூங்காக்கள், நூலகங்கள், பேருந்து நிலையங்கள், பொது மற்றும் சமுதாய கழிவறைகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேட்டூர் வட்டம் மேச்சேரி ஊராட்சி ஒன்றியம் செம்மனூர் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு வகுப்பறைகள், மாணவ மாணவியர்கள் வருகை பதிவேடு, காலை உணவு திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து பார்வையிட்டு மாணாக்கர்களை படிக்க சொல்லி அவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ மாணவியர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் அரங்கனூர் கால்நடை மருத்துவமனையால் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாள்தோறும் சிகிச்சைக்கு வரும் கால்நடைகளின் எண்ணிக்கை, கால்நடைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கால்நடை மருத்துவரிடம் கேட்டறியபட்டது.

சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் சார்பில் செயல்படும் புக்கம்பட்டி ஊராட்சி பால் குளிர்விப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு பால் கொள்முதல், பால் பரிசோதனை மேற்கொள்ளும் முறை, பால் குளிர்விப்பு உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்தும் கேட்டறியப்பட்டது. முக்கம்பட்டி அரசு துணை சுகாதார நிலையத்தில் மருத்துவ பயனாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறியப்பட்டது.

அது போன்று மேச்சேரி சார்- பதிவாளர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் சொத்து ஆவணங்கள், வில்லங்கச் சான்றுகள், விற்பனை பத்திரங்கள் உள்ளிட்ட கோப்புகள் மற்றும் பதிவேடுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களுக்கு விரைவான சேவையினை வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆடு ஆராய்ச்சி நிலையத்தில் ஆடு வளர்ப்பு, தீவனங்கள் மற்றும் ஆராய்ச்சி பணிகள் உள்ளிட்ட வை குறித்து கேட்டறியப்பட்டது. மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் காலை முதல் கள ஆய்வு மேற்கொண்ட அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் ஆலோசனை நடத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் வெண்ணைத்தாழி அலங்காரத்தில் 18 பெருமாள் சுவாமிகள் வீதியுலா
கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் திறன் பயிற்சி கட்டடம்; தமிழக முதல்வர் திறந்தார்
துறையூரில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த சப் கலெக்டர்
பாப்பாரப்பட்டி பேரூராட்சி தவெக சார்பில் முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி விருதுகள் வழங்கும் விழா
பெருந்துறையில் விசிக ஆலோசனைக் கூட்டம்: ஆகஸ்ட் 18 திருப்பூர் மண்டல செயற்குழு கூட்டத்திற்கு திரளாக பங்கேற்க தீர்மானம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் தூக்க நேர்ச்சை: தமிழகம் கேரளாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

March 23, 2026
25 Views
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மார்த்தாண்டம் வருகை: மறைந்த குழித்துறை நகர முன்னாள் செயலாளர் ஜெயராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல்
மண்டைக்காடு அருகே பைக் – கார் மோதல்; மூதாட்டி படுகாயம்
தமிழகத்தில் பழங்குடியினருக்கு மீண்டும் 3 சட்டமன்றத் தொகுதிகள் உயர்த்திட வேண்டும்
விஜய்வசந்த் எம். பி வேதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account