திருப்பூர் -ஜூலை:08
எஸ் டி பி ஐ வடக்கு மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த சிறப்பு செயற்குழு கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாநகராட்சியில் பெரும்பான்மையான வார்டுகளில், திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில் 50 சதவீதம் போட்டியிடுவது எனஎஸ்டிபிஐ கட்சியின் சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வடக்கு மாவட்ட செயற்குழு மாவட்ட தலைவர் பஷீர் அகமது தலைமையில் பொதுச்செயலாளர் அப்துல் வஹாப் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில செயற்குழு உறுப்பினரும் திருப்பூர் மண்டல தலைவருமான ராஜா உசேன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாவட்ட பொருளாளர் ஜாபீர் அகமது, முன்னிலை வகித்தார். தெற்கு தொகுதி தலைவர் அன்வர் பாஷா, வடக்கு தொகுதி முகமது யாசின், தெற்கு தொகுதி செயலாளர் ஷேக் அலாவுதீன், இறுதியில்மாவட்ட செயற்குழு உறுப்பினர் திப்பு சுல்தான் நன்றி உரையாற்றினார்.



