இரணியல், ஜூன் 15 –
இரணியல் அருகே உள்ள இரணியல் கோணம் என்ற இடத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (40) டிரைவராக பணி புரிந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஷெரீன் (33) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பதாக தெரிகிறது. இதனால் ராஜேஷ் மது பழக்கத்திற்கு அடிமையான தாக கூறப்படுகிறது.
நேற்று மாலை வீட்டுக்கு அருகே உள்ள வலியகுளத்திற்கு குளிக்க சென்றார். நீண்ட நேரம் ஆகியும் ராஜேஷ் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தந்தை காளிதாஸ் குளத்தில் தேடி சென்று பார்த்த போது. குளக்கரையில் செருப்பு, துணிகள் மற்றும் சோப்பு போன்றவை மட்டும் இருந்தது. ராஜேஷை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கம் உறவினர்கள், நண்பர்கள் குளத்தில் தேடியும் பலன் இல்லாத நிலையில், இது குறித்து திங்கள்நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் ஜீவன் தலைமையில் நீண்ட நேரம் தேடியும் உடல் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரம் தேடிய பின் ராஜேஷ் பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து காளிதாஸ் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். இந்த குளத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அளவுக்கு அதிகமாக மண் அள்ளப்பட்டது. இதனால் இந்த குளத்தில் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



