திருச்செந்தூர், ஜூன் 1 –
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகப் பகுதியில் காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா நேற்று ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். பின்னர் புறக்காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள CCTV கேமராக்களின் கண்காணிப்பு திரையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின்போது காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம், தீபு, காவல் துணை கண்காணிப்பாளர்கள் செல்வராஜ், குரு வெங்கட்ராஜ் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் இணை ஆணையர் ராமு ஆகியோர் உடனிருந்தனர்.



