சென்னை, ஜூன் 26 –
இந்தியாவின் முன்னணி மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் நிறுவனம் தனது 20 ஆண்டுகால சேவை, நம்பிக்கை மற்றும் வளர்ச்சிப் பயணத்தை கொண்டாடும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் “ஸ்டார் முகவர்கள் திருவிழா 2026″ என்ற நிகழ்ச்சியை நடத்தியது.
ஸ்டார் ஹெல்த் – சென்னை மண்டலம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, தமிழ்நாடு வணிகத் தலைவர் பாலாஜிபாபு தலைமையில், சென்னை மண்டலத் தலைவர்கள் சையத் இம்ரான் மற்றும் அருளேசன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 2,500-க்கும் மேற்பட்ட ஸ்டார் முகவர்கள், 500-க்கும் மேற்பட்ட ஸ்டார் விற்பனைப் பிரிதிநிதிகள், பகுதி மேலாளர்கள், விற்பனை மேலாளர்கள், கிளை மேலாளர்கள் மற்றும் பயிற்சி & மேம்பாட்டு
அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆனந்த் ராய் கலந்து கொண்டு முகவர்களுடன் உரையாற்றினார். மேலும், தலைமை நிதி அதிகாரி, நிலேஷ் காம்ப்ளி, தலைமை மனிதவள அதிகாரி ஸ்ரீராம் ரகுநந்தன் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள், தலைமை அலுவலகம், பிராந்திய அலுவலகம் மற்றும் காப்பீட்டு கோரிக்கை அலுவலகங்களின் தலைமைத்துவக் குழுவினர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மேலும், முகவர்களுக்கான வளர்ச்சி வாய்ப்புகள், ஸ்டார் ஹெல்த் நெட்வொர்க் மருத்துவமனைகள், பிரதான மருத்துவமனை சேவைகள், வீடு தேடி மருத்துவம், காப்பீட்டு கோரிக்கை உதவி, சென்னை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட சேவைகள் மற்றும் தேவைக் காலங்களில் குடும்பங்களுக்கு முகவர்கள் வழங்கிய ஆதரவு ஆகியவை அனுபவக் கண்காட்சி அரங்குகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டன.
நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டார் ஹெல்த் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆனந்த் ராய் “கடந்த 20 ஆண்டுகளாக ஸ்டார் ஹெல்த் வளர்ச்சிப் பயணத்தில் முகவர்கள் வழங்கிய அர்ப்பணிப்பு, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. இன்று ஸ்டார் ஹெல்த் நிறுவனத்துக்கு 8.5 லட்சத்திற்கும் மேற்பட்ட முகவர்கள், 15,000-க்கும் மேற்பட்ட மருத்துவமனை வலையமைப்பு, 2.8 கோடிக்கும் மேற்பட்ட பாதுகாக்கப்பட்ட மக்கள் மற்றும் தொடக்கம் முதல் 769,800 கோடிக்கும் மேற்பட்ட காப்பீட்டு கோரிக்கைத் தொகை வழங்கப்பட்ட வலுவான அடித்தளம் உள்ளது. இந்த வெற்றிப் பயணத்தில் முகவர்களின் பங்கு என்றும் முக்கியமானதாக இருக்கும்,” என்று தெரிவித்தார்.
தமிழ் பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சிகள், ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் 20 ஆண்டுகால பயணத்தை எடுத்துக்காட்டும் சிறப்பு காணொளி, சேவை மற்றும் நம்பிக்கையை பதிவு செய்த நிகழ்ச்சி பகுதிகள் பங்கேற்பாளர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றன.