By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தாய்லாந்து பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற விஐடி துணை தலைவர் சங்கர் விசுவநாதனுக்கு பாராட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தாய்லாந்து பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற விஐடி துணை தலைவர் சங்கர் விசுவநாதனுக்கு பாராட்டு விழா
தமிழ்நாடுவேலூர்

தாய்லாந்து பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற விஐடி துணை தலைவர் சங்கர் விசுவநாதனுக்கு பாராட்டு விழா

Last updated: March 9, 2026 6:14 pm
March 9, 2026
30 Views
Share
SHARE

வேலூர், மார்ச் 9 –

தாய்லாந்து பாங்காங் நகரில் உள்ள ராஜமங்கலா பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற விஐடி துணை தலைவர் சங்கர் விசுவநாதன் அவர்களுக்கு பாராட்டு விழா இன்று நடைபெற்றது.

விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் மற்றும் கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோர் விஐடி துணை தலைவர் சங்கர் விசுவநாதனுக்கு அருளாசி வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மு.வெங்கடசுப்பு வரவேற்று பேசினார்.

விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசும்போது, “வடஆற்காடு மாவட்டம் கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. கல்வி ஒன்று தான் நம்மை உயர்த்தும். அது தான் அழியாத, நிரந்தர செல்வம். அப்படியான உயர்கல்வியை அனைவருக்கும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறோம்.

இந்தியாவில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் 28 சதவீதமாக உள்ளது. தமிழ்நாடு 47 சதவீதத்துடன் நாட்டிலேயே முதன்மையாக இருந்தாலும் வடஆற்காடு மாவட்டம் 30 முதல் 38 சதவீதத்துடன் பின்தங்கி உள்ளது.

இந்த மாவட்டங்களில் உயர்கல்வியை மேம்படுத்த அனைவர்க்கும் உயர்கல்வி அறக்கட்டளை செயல்படுத்தி வருகிறது. இதற்கு ரூ.1.75 கோடி நிதி திரட்டி ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. கல்வி ஒன்று தான் நிரந்தர பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்” என்றார்.

விஐடி துணை தலைவர் சங்கர் விசுவநாதன் ஏற்புரையாற்றி பேசும்போது, “மனிதநேயத்தோடு நான் வாழ, வெற்றி சிகரங்களை தொட எனக்கு ஏணியாக இருந்த எனது தந்தை கோ.விசுவநாதனுக்கு இந்த கவுரவ பட்டத்தை காணிக்கையாக்குகிறேன். அவரிடம் வார்த்தை குறைவு, அவர் மவுனமே எனது முதல் பாடநூல். எனது கனவு இலக்கை அடைய ஊக்கம் கொடுத்தவர் எனது மனைவி ரமணி பாலசுந்தரம்.

கல்வி பணியின் மூலம் சமுதாயத்தோடு இணைந்து அதன் முன்னேற்றத்துக்கு உழைக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு தலைமுறையை முன்னேற்ற சொத்து உண்டு என்றால் அது கல்வி தான். உயர்கல்வி எனது பயணத்திற்காக தாய்லாந்து பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் வழங்கியுள்ளது. இதற்கு ஏணியாக, உந்து சக்தியாக, வழிகாட்டியாக இருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைமை உறுப்பினர் ராஜமாணிக்கம் பேசுகையில், “உலகப் புகழ் பெற்று விளங்கும் விஐடி பல்கலைக்கழகம் 40 ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் பொறியியல் கல்லூரியாக தொடங்குவதற்கு தனது தந்தையான வேந்தர் கோ.விசுவநாதனிடம் அறிவுறுத்தியவர் சங்கர் விசுவநாதன். அவரது உழைப்பையும் மக்கள் சேவையும் பாராட்டி தாய்லாந்து பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இதேபோல இதர சர்வதேச அளவில் பல்கலைக்கழகங்கள் மேலும் பல பட்டங்களை வழங்கி கவுரவிக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கலியமூர்த்தி பேசும்போது, “ஜாதி, மதம் என்ற எல்லைகளை கடந்து விஐடி பல்கலைக்கழகம் உலகளவில் சிறந்த கல்வி நிறுவனமாக விளங்கி வருகிறது. கல்வியானது அறம், மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. வாழ்க்கையின் இறுதி வரை அழியாத செல்வமாக இருப்பது கல்வி ஆகும். அத்தகைய அழிவற்ற கல்வி செல்வத்தை அளிக்கும் விஐடி குடும்பத்தினர் வாழும் உதாரணம் ஆகும்” என்றார்.

முன்னதாக அனைவர்க்கும் உயர்கல்வி அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம் காசோலையை விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், விஐடி துணை தலைவர் சங்கர் விசுவநாதனிடம் தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரும், டார்லிங் குழுமத்தின் தலைவர் வெங்கடசுப்பு மற்றும் நிர்வாக இயக்குநரான முரளி ஆகியோர் வழங்கினர்.

விழாவில் விஐடி துணை தலைவர் ஜி.வி.செல்வம், உதவி துணை தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன், ரமணி பாலசுந்தரம், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கலியமூர்த்தி, திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, ஸ்ரீ நாராயணி மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் என்.பாலாஜி, தங்க கோவில் தலைமை இயக்குநர் எம்.சுரேஷ்பாபு, சிஎம்சி மருத்துவமனை உதவி இயக்குநர் தீபக் செல்வராஜ், விழா குழு தலைவர் ரமேஷ் ஜூவல்லரி ரமேஷ்குமார், விழா குழு செயலாளரும் வேலூர் வணிகர் சங்கத்தின் தலைவருமான ஆர்.பி.ஞானவேல் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம்: மாணவிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த பள்ளி நிர்வாகம்
ஐரேனிபுரத்தில்உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
தமிழ்நாடு பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி அனைத்து ஓய்வு ஊதியர் நல அமைப்பின் சார்பில் முதல் மாநில மாநாடு
முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி
திருச்சி ஏர்போர்ட்டில் கஞ்சா கடத்தல் குற்றவாளி கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

மாவட்ட பொதுக்குழு கூட்டம்!

December 26, 2024
49 Views
மகளிருக்கான 33% இட ஒதுக்ககீடை
அழுகிய நிலையில் ஆண் பிணம்
தருமபுரி ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டி
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் – பெரியகுளம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account