நாகர்கோவில் மே 2
குமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள ஜீவானந்தம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மே தினம் கொண்டாடிய மருத்துவர் நாகேந்திரன் மற்றும் தொழிலாளிகள். கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பெல்லார்மின் , முன்னாள் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் , முன்னாள் குழித்துறை நகராட்சி மன்ற தலைவர் டெல்பின் , எஸ் .அந்தோணி ,உசேன், அருணாச்சலம் , செல்லத்துரை ,மீனாட்சி சுந்தரம் ,அஜிஸ் ,ராஜு ஆகியோர் ஒன்றிணைந்து மே தினத்தில் உழைக்கும் தொழிலாளிகளின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு புரட்சிகளை மேற்கொண்டு உழைக்கும் வர்க்கத்தினரை தலை நிமிர செய்த ஜீவானந்தத்தின் மங்காத புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக உழைக்கும் தொழிலாளிகளுடன் இணைந்து பல்வேறு இடங்களில் கொரோனா நிவாரண பணிகளும் மருத்துவ முகாம்களும் மரக்கன்றுகளை கொடுத்தும் மரங்களை நட்டும் பசுமை புரட்சியும் செய்த சமூகசேவகர் மருத்துவர் தி.கோ.நாகேந்திரன் ( கொரோனாவை எதிர்த்து போராடிய முதல் தேசிய போராளி ) நாகர்கோவிலில் அமைந்துள்ள ஜீவா மணிமண்டத்தில் உள்ள ஜீவானந்தம் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மே தின நிகழ்வை தொழிலாளர்களோடு இணைந்து நடத்தினார்.



