ஈரோடு, ஜூன் 18 –
ஈரோடு பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் விற்கப்படுவதாக புகார்கள் கூறப்பட்டன. இதை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் பல குழுக்களாக சென்று கடைகளில் அதிரடி சோதனை நடத்தி பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
ஈரோடு புது மஜீத் வீதி சுல்தான் பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாநகராட்சி அதிகாரிகள் மாசு கட்டுப்பாடு அதிகாரிகளுடன் இணைந்து கடை கடையாக சென்று சோதனை நடத்தினர். மாநகராட்சி சுகாதார அலுவலர் நல்ல சாமி தலைமையில் நடந்த இந்த சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் விற்கப்படுவது தெரிய வந்தது. அவற்றை கிலோ கணக்கில் பறிமுதல் செய்தனர். மேலும் அவைகளை விற்ற கடை உரிமையாளருக்கு அபராதமும் விதித்தனர்.



