தென்காசி, ஜுன் 16 –
தென்காசி மாவட்டம் ஊத்துமலையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர் கிளை அலுவலகம் திறப்பு விழாவில் இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை கலந்து கொண்டார்.
தென்காசி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவர் கலைகதிரவன் தான் வெற்றி பெற்றதும் ஊத்துமலை பகுதி மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் ஊத்துமலையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படும் என உறுதியளித்திருந்தார். அதன்படி சட்டமன்ற உறுப்பினர் கிளை அலுவலகம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
திமுக இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை,மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், முன்னாள் மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் முன்னிலை வகித்தனர். தென்காசி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் கலைகதிரவன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார்.
ஆலங்குளம் யூனியன் சேர்மனும், மாவட்ட மகளிரணி அமைப்பாளருமான திவ்யா மணிகண்டன் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், சேக்முகமது, ஜேசுராஜன், முன்னாள் ஒன்றிய செயலாளர் காசிதர்மம் துரை, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் அண்ணாமலை, ஒன்றிய கவுன்சிலர்கள் பால்துரை, வள்ளியம்மாள் முருகேசன், துணை சேர்மன் ராஜாமணி, கவுன்சிலர் அந்தோணிசாமி, ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார், பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரன், ஊத்துமலை செயலாளர் ராமச்சந்திரன், தங்கம், ராஜா, முருகையா, லட்சுமணன், அரிராம் சேட், கணபதி, மாடசாமி, திருமலை குமார், செல்வகுமார், வனராஜ், அரசு ஒப்பந்ததாரர் மணிகண்டன், ஐவேந்திரன், மாணிக்கராஜ், மாணிக்கம், சபரி ராஜன், மருதப்ப பாண்டியன், விவசாய சங்கம் மாடசாமி, இளைஞரணி துணை அமைப்பாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் திமுக, கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



